எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
"வினோ பொத்தகசாலை" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட எமது விற்பனை நிலையம் கடந்த 10 வருடங்களில் வாடிக்கையாளர்களாகிய உங்களின் பெரும் ஆதரவுடன் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் எமது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுடன், தூர இடங்களில் இருந்து வரும் பல வாடிக்கையாளர்களின் சிரமங்களை நிவர்த்தி செய்யும் முகமாகவும் இணையம் மூலமான விற்பனை என்னும் பெரும் முயற்சி ஒன்றில் கால் பதித்துள்ளோம்.

vino.lk என்னும் வர்த்தக இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

நிகழ்நிலை மூலம் நீங்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அருகில் உள்ளவர்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை தெரிவு செய்து நேரிலும் வந்து பெற்றுக்கொள்ளலாம், அல்லது Cash on Delivery மூலமாகவும் நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் நீங்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ச்சியாக எமது இணையத்தை பார்வையிடுங்கள் பல புதிய பொருட்களை நாளாந்தம் பதிவேற்றம் செய்வோம். 

அத்துடன் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி சில நாட்களில் சேர்க்கப்படும்.

நன்றி.